/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
/
தேசிய கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
தேசிய கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
தேசிய கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
ADDED : டிச 11, 2025 06:32 AM

ஈரோடு: ஈரோடு, ஜி.எச்., ரவுண்டானா அருகே மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், நேற்று தேசிய கைவினை பொருட்கள் வார கண்காட்சி, விற்பனை துவங்கியது.
மேலாளர் சேவியர் வரவேற்றார். தேசிய கைவினை பொருட்கள் வார கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும், 14 வரை கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனை நடக்கிறது.
இங்கு வீடுகள், கோவில், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பிறந்த நாள், திரு-மண நாள், கவுரவ விருந்தினர்களுக்கு பரிசு தர பயன்படும் வகையில் ஏராளமான பொருட்கள் உள்ளன.பித்தளை, பஞ்ச-லோகம், கருப்பு, வெள்ளை உலோகத்தால் அழகிய வேலைப்-பாடு மிக்க கடவுள் சிற்பங்கள், மரச்சிற்பங்கள், சந்தன மர சிற்-பங்கள், புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை கலைத்தட்டுகள், நாஞ்-சியார் கோவில் குத்துவிளக்கு, தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ் பொம்மைகள், சுடு களி மண் பொம்மைகள், சந்தன மாலைகள், துளசி மாலைகள் உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. 10 முதல், 1.16 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கைவினை பொருட்கள் உள்ளன. பொருட்களுக்கு, 10 சதவீத தள்-ளுபடி உண்டு. ஈரோடு டெக்ஸ்வேலியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலைய கிளை-யிலும், 14 வரை விற்பனை நடக்கிறது.

