/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்
/
பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்
பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்
பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்
ADDED : ஜன 31, 2025 02:37 AM
ஈரோடு: பிரசார பொதுகூட்டத்தில், நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர், செருப்பை எடுத்து காட்டி எச்சரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, குமலன்குட்டையில் நேற்று முன்தினம் இரவு பொது கூட்டம் நடந்தது. இதில் அக்-கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசும்-போது, ''ஈ.வெ.ரா., இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் இருந்த, 60 பெண் புலவர்களை படிக்க வைத்தார். திருக்குறளை எழுதும்-போது உடைந்த எழுத்தாணிக்கு பதில் புதிய எழுத்தாணியை கொடுத்து எழுத வைத்தார். தொல்காப்பியம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, அகநானுாறு, புற-நானுாறு தந்தவர்களை உருவாக்கினார் என்று யாராவது கூறினால், பிஞ்ச செருப்பை எடுத்து அடிப்பேன்,'' என, பேசியப-டியே, தனது ஒற்றை செருப்பை கழற்றி காட்டி, மேலும் பேச்சை தொடர்ந்தார். மேடையில் செருப்பை எடுத்து காட்டியதுடன், அடிப்பேன் என பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.