ADDED : மார் 19, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் செக்போஸ்டில், நேற்று முன்-தினம் இரவு பறக்கும் படை அலுவலர் கோபால் தலைமையி-லான, தேர்தல் பறக்கும் படையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற பர்கூர் மேல்தெ-ருவை சேர்ந்த தே.மு.தி.க., உறுப்பினர் முருகன் என்ற முருகராஜ், 47, என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த பையில், 89 குவார்ட்டர் மது பாட்டில் இருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது. அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றதை விசார-ணையில் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, மது பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வெள்ளித்திருப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்-தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன், மது பதுக்கிய வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
