ADDED : ஜூன் 21, 2026 04:23 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:இளங்கலை
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு
மாவட்டத்தில், 13 மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில், 4,270 மாணவ,
மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களை ஏற்பாடு செய்யும்
பணி நேற்று தீவிரமாக நடந்தது.
இதன்படி துாய்மைப்பபணி, குடிநீர்,
கழிவறை, மின்சார வசதிகள் குறித்து ஆய்வு செய்து, உறுதி
செய்யப்பட்டது. நீட் தேர்வு மையங்களில், தேர்வர் பதிவெண்களை
ஆசிரியைகள் ஒட்டினர். தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட அறை பகுதிகளில்,
நேற்று காலை முதலே பிறர் அனுமதிக்கப்படாமல், தேர்வுக்கான ஏற்பாடு
முழுவீச்சில் நடந்தது.
