ADDED : ஆக 12, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் சார்பில், நீட் முதுநிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது.
அரசு, சுய நிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி, நந்தா இன்ஜினியரிங் கல்லுாரி, செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரி, ஆப்பக்கூடல் சக்தி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலை, மாலை நடந்த தேர்வில், 698 பேர் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.