குவாரிகள் மீது நடவடிக்கை பேச்சுவார்த்தையில் முடிவு
குவாரிகள் மீது நடவடிக்கை பேச்சுவார்த்தையில் முடிவு
ADDED : மார் 13, 2026 04:36 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே கிராம சாலைகளில், கிரஷர் மற்றும் எம்,சாண்ட் ஆலைகளின் டிப்பர் லாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட கனிமங்களை ஏற்றிச் செல்கின்றன.
இதனால் சாலை சேதமாகி விட்டதாக கூறி, தமிழ்நாடு சுற்றுச்-சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மரம் நடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதையடுத்து காங்கேயம் தாசில்தார் அலுவ-கத்தில் நேற்று மதியம், கீரனுார் தனியார் கிரஷர் உரிமையாளர், பொதுமக்களுக்கும் இடையே, தாசில்தார் (பொறுப்பு) செல்வி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் அதிக டன் ஏற்றிச் செல்லக்கூடாது. மீறினால் சம்பந்தப்-பட்ட குவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்-பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நிறைவுற்றது. இதை தொடர்ந்து சாலையில் மரக்கன்றுகள் நடும் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து, மக்கள் கலைந்து சென்றனர்.
