/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட்: அக்டோபரில் பயன்பாட்டிற்கு வரும்
/
ஈரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட்: அக்டோபரில் பயன்பாட்டிற்கு வரும்
ஈரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட்: அக்டோபரில் பயன்பாட்டிற்கு வரும்
ஈரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட்: அக்டோபரில் பயன்பாட்டிற்கு வரும்
ADDED : ஜூலை 31, 2025 01:53 AM
ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கரூர், திருச்சி உட்பட தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களுக்காக, சோலார் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான, 19.9 ஏக்கர் நிலத்தில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 63.50 கோடி ரூபாய் செலவு
செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் ஆய்வு நடத்தினார். அப்போது, பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் உள்ளே வருவதற்கான வழித்தடங்கள், ரேக்குகள், மக்களுக்கு தேவையான வசதிகள், டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதி, வணிக வளாக கடைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற
வற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் டவுன் பஸ்கள் உள்ளே வருவதற்கான பாதை, பயணிகளை ஏற்றுமிடம், அதேபோல் சர்வீஸ் பஸ்கள் வரும் பாதை, நிறுத்தி வைக்கும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்டில் வணிக கடைகள் ஏலம் விடுவது, அருகில் கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.பின், கமிஷனர் அர்பித் ஜெயின் கூறுகையில், ''பஸ் ஸ்டாண்ட் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எதிர்
காலத்தில் எந்த கூடுதல் பணிகளும் செய்யாத அளவிற்கு, அனைத்து வசதிகளையும்
திட்டமிட்டு செய்து வருகிறோம். பணிகள் அனைத்தையும் முடித்து, அக்டோபரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,'' என்றார்.
துணை கமிஷனர் தன
லட்சுமி உடனிருந்தார்.