/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காஞ்சிக்கோவில் பிரிவில் புதிய மேம்பாலம் திறப்பு
/
காஞ்சிக்கோவில் பிரிவில் புதிய மேம்பாலம் திறப்பு
ADDED : ஆக 28, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை,சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருந்துறை, காஞ்சிகோவில் பிரிவு மற்றும் துடுப்பதி பிரிவில், மத்திய அரசின், 92.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்துகளை தடுக்க, புதியதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
அதில், பெருந்துறை, காஞ்சிகோவில் பிரிவில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பாலத்தில், முதற்கட்டமாக சேலம் முதல் கோவை செல்லும் ஒரு வழிப்பாதை மட்டும், நேற்று போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், கோவையிலிருந்து சேலம் செல்லும் வழிப்பாதையும், காஞ்சிக்கோவில் செல்லும் நுழைவு பாலம் வழிப்பாதையும் இரண்டொரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

