தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தபால் ஓட்டுக்களை முழுமையாக பெற புதிய முறை; கலெக்டர்

தபால் ஓட்டுக்களை முழுமையாக பெற புதிய முறை; கலெக்டர்

தபால் ஓட்டுக்களை முழுமையாக பெற புதிய முறை; கலெக்டர்


ADDED : மார் 16, 2026 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டுக்களை முழுமையாகவும், தவறின்றி பெறவும், புதிய முறை கையாளப்படுகிறது.

பொது தேர்தல்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸ் உட்பட பிற துறையினரும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய தபால் ஓட்டு முறை உள்ளது. இவர்களது ஓட்டு எந்த தொகுதியில் இருந்தாலும், அத்தொகுதிக்கான பேலட் ஷீட் தபால் ஓட்டாக பெறப்பட்டு, ஓட்டை பதிவு செய்து தபாலில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அன்று காலை, 8:00 மணி வரை பெறப்படும்.

ஒருவேளை அவரது ஓட்டு, அவர் பணி செய்யும் தொகுதி அல்லது வேறு பூத்தில் இருந்தாலும், அதற்கான பேலட் ஷீட் பெற்று, ஓட்டுப்பதிவு செய்வார். ராணுவத்தில் உள்ளவர்களுக்கு தபாலில் அனுப்பி, திரும்ப பெறப்படும். இம்முறை மாற்றப்பட்டுள்ளதாக ஈரோடு கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, மூன்று பயிற்சி வழங்கப்படும். முதல் பயிற்சியில் அவர்கள் ஓட்டு எங்குள்ளது என்ற விபர படிவம் பெற்று, அத்தொகுதிக்கான பேலட் ஷீட் பெற்று, இரண்டாவது பயிற்சியில் வழங்கி, அவரது துறை தலைவர் கையெழுத்து பெற்று, மூன்றாவது பயிற்சியில் ஓட்டை பதிவு செய்து, ஓட்டை பதிவு செய்வர். ராணுவம் உள்ளிட்ட அயல் பணிகளில் உள்ளோருக்கு, அவர்களது விருப்ப விபரம் பெற்று, பேலட் ஷீட் அனுப்பி, தபாலில் ஓட்டை திரும்ப பெறுவோம்.இந்த முறை, தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தோரின் முதல் பயிற்சியில் அவரது ஓட்டு எங்குள்ளது என்ற விபரம் பெற்று, திருச்சியில் உள்ள மண்டல தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன், மண்டல அதிகாரி மூலம் கொடுத்து அனுப்புவோம். அவர்கள், தேர்தல் பணியாளரின் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம், தொகுதிக்கான பேலட் ஷீட்டை இணைத்து, இவரது ஓட்டை உறுதி செய்து, மீண்டும் திருச்சி வந்து, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்புவர்.அங்கிருந்து பிரித்து, அவரவர் தேர்தல், இரண்டாம் பயிற்சியின்போது வழங்கப்படும். அங்கே ஓட்டுப்பதிவு செய்து, தவறு, குறைகளின்றி திரும்ப பெற்று, மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன், மண்டல அதிகாரி மூலம் மீண்டும் திருச்சி மண்டல அலுவலகத்தில் வழங்கி, அவர் எந்த மாவட்டமோ அங்கு அனுப்பி, அங்கிருந்து அவர் சார்ந்த தொகுதி தபால் ஓட்டுடன் சேர்க்கப்படும். அதுபோல, ராணுவம் உள்ளிட்ட அயல் பணியில் உள்ளோருக்கு தேர்தல் ஆணையம் மூலம், விபரம் பெற்று, ஆன்லைனில் அவர்கள் சார்ந்த தொகுதியில், அவரது ஓட்டு விபரம் உறுதி செய்யப்படும். இதன் மூலம், 100 சதவீத தபால் ஓட்டு பெறுவதுடன், தவறு ஏதும் நடக்காமல் தடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us