/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இயக்கத்துக்கு வந்தது சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட்
/
இயக்கத்துக்கு வந்தது சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட்
ADDED : டிச 05, 2025 09:59 AM

ஈரோடு: ஈரோடு அருகே கரூர் சாலையில் சோலாரில், 74.90 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டை, முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம், 26ம் தேதி திறந்து வைத்தார். அடிப்படை பணிகள் நிறைவு செய்யப்பட்டு, மாநகராட்சி ஆணையர் அபிர்த் ஜெயின், துணை ஆணையர் தனலட்சுமி முன்னிலையில் பஸ்கள் இயக்கம் நேற்று காலை துவங்கியது.
ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இது-வரை தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் இங்கிருந்து இனி செல்லும். கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், அறந்தாங்கி, புதுக்கோட்டை, மதுரை, திருப்-பத்துார், நாகர்கோவில், மார்த்தாண்டம், கம்பம், ராஜபாளையம் மற்றும் வெள்ளக்கோவில் பகு-திக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டது.
இதுபற்றி அரசு போக்குவரத்து ஈரோடு பொது மேலாளர் சுப்பிரமணியம் கூறியதாவது: இங்கிருந்து, 117 அரசு பஸ்கள், 41 தனியார் பஸ்கள் இயக்கப்படும். மத்-திய பஸ் ஸ்டாண்டுக்கு, 24 மணி நேரமும் நகரப்-பேருந்து இயக்கப்படும். ஏற்கனவே பெறப்படும், ஒன்பது ரூபாய் கட்டணமே வசூலிக்கப்படும். இங்கு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஓய்வு அறை, அதிகாரிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. மக்கள், பயணிகள் தேவைக்கேற்ப நகர பஸ்களின் எண்-ணிக்கை கூடுதலாக இயக்கப்படும். தற்போ-தைக்கு பழனி செல்லும் பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு கூறினார்.
முழு அளவில் இயக்கம்
நேற்றைய நிலையில் முழு அளவில் அரசு பஸ்கள் இயங்க தொடங்கின. தனியார் பஸ்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் இயங்கின. மீதி பஸ்கள் முன்பு போல மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இவ்வழியாக இயங்கியது. நகர டவுன் பஸ், மினிபஸ்கள் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வந்து சென்றன. ஆட்டோக்கள் வெளியே நிறுத்தப்பட்-டாலும், பயணிகளை ஏற்றி, இறக்க உள்ளே வந்து செல்-கின்றன. பயணிகள் வசதிக்காக காத்திருக்கும் அறை, அமரும் அறை, கழிப்பிடம், சுகாதார வளாகம், மருந்தகம், பாதுகாப்பு பெட்டக அறை வசதி உள்ளது.
பாதுகாப்பில் போலீசார்
இப்பகுதி மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷ-னுக்கு உட்பட்ட பகுதி என்பதால், மொடக்குறிச்சி போலீஸார் ஓரிருவர் இருந்தனர். ஈரோடு மாநகர போலீசார், கட்டுப்பாட்டு அறை வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் டீக்-கடை, ஸ்நாக்ஸ் விற்பனை கடைகள், உணவு விற்பனைக்கு எவ்வித கடைகளும் இல்லை.

