ADDED : மார் 15, 2026 07:29 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஜவுளி தொழிலை மேம்படுத்த,
உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலனை பாதுகாக்க, சென்னிமலை
வட்டார ஜவுளி உற்பத்தி-யாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் என்ற புதிய
அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் முதல் பொதுக்குழு
கூட்டம், சென்னிமலையில் நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள்
தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக மேலப்பாளையம் மூர்த்தி டெக்ஸ்
டைல்ஸ் ஈஸ்வர-மூர்த்தி, செயலாளராக ஸ்ரீவிக்னேஷ் டெக்ஸ்டைல்ஸ் கோபு,
பொருளாளராக மோகன்ராஜா டெக்ஸ்டைல்ஸ் கோபால், ஸ்ரீ கல்பனாதேவி
டெக்ஸ்டைல் ராமசாமி துணை தலைவராக, இணை செயலாளராக ஸ்ரீ பேப்ரிக்ஸ்
விஜயகுமார், கே.ஆர்.பேப்ரிக்ஸ் ரகுபதி, கே.எம்.எஸ்.டெக்ஸ் மோகன் தேர்வு
செய்யப்பட்டனர்.
