புதியதாக சேர்ந்த வாக்காளருக்கு வீடு தேடி அடையாள அட்டை
புதியதாக சேர்ந்த வாக்காளருக்கு வீடு தேடி அடையாள அட்டை
ADDED : பிப் 24, 2026 09:55 AM
ஈரோடு: புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டோருக்கு, விரைவில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுக்கு தபாலில் வந்து சேரும்.
இதுபற்றி ஈரோடு கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்துக்கு அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். கடந்த, 2026 ஜன.,1ம் தேதியை தகுதி நாளாக கொண்டும், அதன் பின்னர், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர்.
அவ்வாறு இணைந்தவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால், மும்பையில் வாக்காளர் அடையாள அட்டை வண்ணத்தில் அச்சிடப்பட்டு, அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவுக்கு வந்து சேரும். அவ்வாறு வரப்பெற்ற வாக்காளர் அட்டையை, தபாலில் வீட்டுக்கே அனுப்புகிறோம். தற்போது, 22,000 கார்டு வரப்பெற்று, வீடுகளுக்கு அனுப்பப்படுகிறது.இவ்வாறு கூறினார்.
