sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 10, 2024 10:56 AM

Google News

ADDED : ஜன 10, 2024 10:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடியில் 32 மி.மீ., மழை

ஈரோடு மாவட்டத்தில், கொடுமுடியில் அதிகபட்சமாக, 32 மி.மீ., மழை பதிவானது.

ஈரோட்டில் கடந்த இரு நாட்களாக பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. கடந்த, 8ல் கொடுமுடியில் அதிகபட்சமாக 32 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): மொடக்

குறிச்சி-,2, சென்னிமலை,9, பவானி, 1.80, அம்மாபேட்டை, 3.20, வரட்டுபள்ளம், 6, குண்டேரிபள்ளம்,2.20, பவானிசாகர்,1 என மொத்தம், 57.20 மி.மீ., மழை பதிவானது.

இன்ஸ்பெக்டர் நியமனம்

ஈரோடு மாவட்ட குற்றப்பதிவேடு அலுவலக இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட ஜோதிமணி, பொறுப்பேற்றார். முன்பு திருப்பூர் மாநகரில் பணியாற்றி வந்தார். அவருக்கு எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தியூரில் சாரல் மழைஅந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், சின்னதம்பிபாளையம், புதுமேட்டூர், தோப்பூர்,

அத்தாணி ஆகிய இடங்களில், நேற்று காலையில் இருந்து மாலை வரை, லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால், இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பள்ளி மாணவி மாயம்அம்மாபேட்டை அடுத்த, சென்னபட்டி முரளி காலனியை சேர்ந்தவர் மஞ்சு, 36, கூலி தொழிலாளி. இவரது, 15 வயது மகள், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 6ம் தேதி கூல்டிரிங்க்ஸ் வாங்கி வருவதாக வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் கொடுத்த புகார்படி, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் மிதமான மழைஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரு நாட்களாக ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதிகளில் நேற்று காலை முதலே, கரு மேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. சித்தோடு, வில்லரசம்பட்டி, முத்தாம்பாளையம், கண்ணாம்பு ஓடை, பி.பெ.அக்ரஹாரம், ஆர்.என்.புதுார், பெருமாள் மலை, சோலார், திண்டல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை நீடித்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

மக்களுக்கு இடையூறுவாலிபர் மீது வழக்கு

ஈரோடு, கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்த விஜயகுமார் மகன் சதீஷ் குமார், 20. ஈரோடு பஸ் ஸ்டாண்ட், காமதேனு லாட்ஜ் அருகே குடிபோதையில் பொது இடத்தில் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்தார். அவரை எச்சரித்தும் கேளாமல் மீண்டும் அதே இடத்தில் போதையில் சுற்றி திரிந்ததால், ஈரோடு டவுன் போலீசார் சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சமையல் தொழிலாளி மாயம்பவானி, ராயல் தியேட்டர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம், 46; சமையல் தொழிலாளி. அடிக்கடி வெளியூர் வேலைக்கு சென்று வரும் வெங்கடாச்சலம், குடிக்கு அடிமையானதால், அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிய வெங்கடாச்சலம் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் தேடியும் தகவல் ஏதும் இல்லாததால், அவரது மனைவி நித்யா, 43, கொடுத்த புகார் அடிப்படையில், பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேன் மோதி வாலிபர் பலிகோபி, நாகதேவன் பாளையம் வேட்டைகாரன் கோவில் கிழக்கு கரடு பகுதியை சேர்ந்த வேல் முருகன் மகன் யுவராஜ், 25. ஈரோடு வில்லரசம்பட்டியில் தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் பணி முடிந்த பின் வீட்டுக்கு யமஹா பைக்கில் புறப்பட்டார்.

அப்போது, தோஸ்த் மினி சரக்கு வேன் டிரைவர், வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து நசியனுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். இதே போல் மேக்சிமா சரக்கு வேன் டிரைவர் நசியனுார் பகுதியில் இருந்து, ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நெடுஞ்சாலை நகர் பகுதியை கடக்க முற்பட்ட போது, ஈரோடு நோக்கி வந்த மினி சரக்கு வேன் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். மழை ஈரத்தில் வேன் இழுத்து கொண்டு சென்று எதிரே வந்த பைக் மீதும், மற்றொரு வேன் மீதும் மோதியது, இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த யுவராஜ் பலத்த காயமடைந்து பலியானார். வேன் டிரைவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.42.32 லட்சத்துக்கு

கொப்பரை விற்பனை

ஈரோடு மாவட்டம், எழுமாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 1,132 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

முதல் தரம் ஒரு கிலோ, 80.15 முதல், 86.99 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 60.16 முதல், 74.69 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 53 ஆயிரத்து, 674 கிலோ கொப்பரை தேங்காய், 42 லட்சத்து, 32 ஆயிரத்து, 256 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆற்றில் மூழ்கியவர் சடலம்

2 நாளுக்கு பிறகு மீட்பு

அத்தாணியில் உள்ள பவானி ஆற்றில் கடந்த, 7ல், இரண்டு பேர், மது போதையில் குளிக்க வந்த போது, ஆற்றில் மூழ்கியதாகவும், நீண்ட நேரமாகி அவர்கள் கிடைக்காததால், அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தேடினர். இதில் அந்தியூர் காலனியை சேர்ந்த ஸ்ரீராம், 29, என்பவரின் உடல் கிடைத்தது. பின், இரண்டு நாட்களாக பவானி, அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் தேடி, நேற்று மாலை ஈசப்பாறையை சேர்ந்த தேவேந்திரன், 32, என்பவரின் உடல் அத்தாணி கைகாட்டியில், பவானி ஆற்றின் முட்புதரில் சிக்கியிருந்தது. அவரது உடலை மீட்ட வீரர்கள் உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கும்பாபிஷேக அழைப்பிதழ்

எஸ்.பி.,யிடம் வழங்கல்

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, ஈரோடு எஸ்.பி., - மேயர் உள்ளிட்டோருக்கு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 22ல் நடக்கிறது. இதில் பங்கேற்க வேண்டும் என, கடந்த சில தினங்களாக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.,வினர் பல்வேறு அமைப்புகள், மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வேதானந்தம் தலைமையில் பொதுச்செயலர் செந்தில், மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், பாஸ்கர் உள்ளிட்டவர்கள், நேற்று ஈரோடு எஸ்.பி.ஜவகர், ஏ.டி.எஸ்.பி ராஜேந்திரன், டி.எஸ்.பி. ஆறுமுகம் உள்ளிட்டோருக்கு கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினர்.

இதே போல், மாநகராட்சி மேயர் நாகரத்தினத்திடமும் அழைப்பிதழை வழங்கினர்.

நீலகிரி எம்.பி., வாகனத்தை

வழி மறித்த யானைகள்

கேர்மாளம் அருகே, நீலகிரி எம்.பி.,ராஜாவின் வாகனத்தை யானைகள் வழி மறித்து நின்றன.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று விட்டு, நீலகிரி எம்.பி.,ராஜா கேர்மாளம் வழியாக கடம்பூர் செல்ல காரில் நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கோட்டாடை பிரிவு அருகே வரும்போது, வனப்பகுதியிலிருந்து குட்டியுடன் இரு யானைகள் எம்.பி.,யின் வாகனத்தை மறித்து சாலை நடுவில் நின்று கொண்டது. போலீஸ் வாகனத்தின் சைரன் அடித்த பின்பு, மெதுவாக நகர்ந்து சாலையோரம் சென்றது. சிறிது நேரம் கழித்து வாகனங்களை எடுத்து சென்றனர்.

தப்பி ஓடிய இரு கைதிகள்கோபியில் மீண்டும் கைது

திருட்டு வழக்கில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகளை, கோபி போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிங்கிரிபாளையத்தில், கரியகாளியம்மன் கோவிலில் கடந்த மாதம், 30ம் தேதி மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து, 9,388 ரூபாயை களவாடி சென்றனர்.

அந்த வழக்கில் திருப்பூரை சேர்ந்த அய்யப்பன், 24, சேது, 25, பரணி, 19, ஆகியோரை கடத்துார் போலீசார் கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில், ஏற்கனவே சிறையில் இருந்த அந்த மூவருக்கும் தொடர்பு இருந்தது.

இதனால் மூவரையும் போலீசார், கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் கடந்த, 6ம் தேதி ஆஜர்படுத்தினர். பின் பணி முடித்து மூன்று கைதிகளையும், அதே வளாகத்தில் உணவு சாப்பிட போலீசார் அனுமதித்தனர். ஆனால் உணவு உண்ட பின், கை கழுவ சென்ற அய்யப்பன், சேது ஆகியோர் தப்பியோடி மாயமாயினர்.

இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., உட்பட நால்வர், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தப்பியோடிய அந்த இரு கைதிகளையும், திருப்பூர் அருகே கோபி தனிப்படை போலீசார் நேற்று காலை, 7:00 மணிக்கு கைது செய்தனர்.

காங்கேயம், தாராபுரத்தில்

அரசு பஸ்கள் இயங்கின

திருப்பூர் மாவட்டம். காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து மொத்தமுள்ள, 80 பஸ்களில், 79 இயக்கப்பட்டன. 400 பேர் பணிக்கு வந்தனர். 31 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள், சர்வீஸ் பஸ்கள் எந்தவித தடையும் இன்றி இயக்கப்பட்டது.

* தாராபுரம், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.1.27 கோடிக்கு சர்க்கரை, வெல்லம்

பழநி தேவஸ்தானம் கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 1.27 கோடி ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 2,870 முதல், 2,900 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,760 முதல், 2,850 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 4,451 மூட்டைகள், 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் உருண்டை வெல்லம், 40 மூட்டை (30 கிலோ) வரத்தானது. அவற்றில் ஒரு மூட்டை, 1,560 ரூபாய் என, 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 1.27 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தி.மு.க., பஞ்., தலைவர் மீது குற்றச்சாட்டு

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், மாதம்பாளையம் ஊராட்சியில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் போலியாக கையெழுத்து பதிவு செய்து, பல லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறி, ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மாதம்பாளையம் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலர் சதீஷ்குமார் கூறியதாவது: மாதம்பாளையம் ஊராட்சி தலைவர் காளியப்பன், தி.மு.க., ஒன்றிய செயலராகவும் உள்ள நிலையில், இந்த ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் போலி ஆவணங்களை தயாரித்து மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்திருந்த நிலையில், பல்வேறு கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஆனால் காளியப்பன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட, ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

மரக்கிளையில் நிர்வாணமாக

அமர்ந்திருந்த மூதாட்டி மீட்பு

கீழ்பவானி வாய்க்கால் கரையின், மரக்கிளையில் நிர்வாண நிலையில் அமர்ந்திருந்த, 60 வயது மூதாட்டியை, தீயணைப்பு வீரரர்கள் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே காவேரிபாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரை ஓரத்தில் நேற்று காலை, 6:45 மணிக்கு அப்பகுதியில் நாய்கள் சத்தம் கேட்டது. சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பார்த்தபோது, வாய்க்கால் கரை ஓரத்தில் இருந்த ஊஞ்ச மரக்

கிளையில் நிர்வாண நிலையில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை மரத்தில் இருந்து கீழே இறக்க முயன்றனர்.

பின், கோபி தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியிடம் சேலையை கொடுத்து, அதை அந்த மூதாட்டி உடுத்தி வர வழிவகை செய்தனர். சிறுவலுார் போலீசாரும், சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார் விசாரித்ததில், உடல் குளிர் நடுக்கத்தால் மூதாட்டியால் பேச முடியவில்லை. இதனால், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us