sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : பிப் 14, 2024 10:01 AM

Google News

ADDED : பிப் 14, 2024 10:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., மகளிரணி

நிர்வாகிகள் கூட்டம்

ஈரோட்டில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் பேசினார்.

வரும், 24ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவது, லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் பழனிசாமி, கேசவமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஐ.கம்யூ., கட்சி கூட்டம்

ஐக்கிய கம்யூ., கட்சி மாநில குழு கூட்டம் மாநில தலைவர் கணேஷ் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில துணை செயலாளர் செவந்திராஜா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சண்முகம் பேசினார். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

தீயில் குடிசை சேதம்

பெருந்துறை, கோமயன் வலசை சேர்ந்தவர் பழனிசாமி. கூலி தொழிலாளி. நேற்று வழக்கம்போல், கூலி வேலைக்கு சென்று விட்டார். பகல், 12:௦௦ மணியளவில் குடிசை வீட்டின் கூரையில் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தகவலின்படி பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

விபத்தில் தொழிலாளி பலிகவுந்தப்பாடி அருகே சலவைக்கல்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன், 24, கூலி தொழிலாளி; பஜாஜ் பைக்கில், சிறுவலுார் சாலையில், வேலம்பாளையம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு சென்றார். நிலைதடுமாறி சாலையோர கல்வெட்டு பாலத்தில் பைக் மோதியதில், பலத்த காயமடைந்தார். கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தந்தை ஆரான் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

58 போலீசார் இடமாற்றம் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வரும், எஸ்.எஸ்.ஐ., ஏட்டு, கிரேடு-1 போலீசார் என மொத்தம், 31 பேர் இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் நிர்வாக காரணங்களுக்காக, 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை

எஸ்.பி., ஜவகர் பிறப்பித்துள்ளார்.

2,000 டன் நெல் வருகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்ட வினியோக திட்டத்துக்காக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 2,000 டன் நெல், தனி சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு நேற்று வந்தது. லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பருத்தி துணி விற்பனைஜவுளி சந்தையில் அதிகரிப்பு

ஈரோட்டில் டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு சாலை பகுதிகள், ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில், ஜவுளி வாரச்சந்தை விற்பனை நேற்று நடந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தற்போது இரவில் பனி அதிகமாக இருந்தாலும், 10 நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டுகிறது. இதனால் பனிக்கான பெட்ஷீட், மெத்தை விரிப்பு, துண்டு மற்றும் காட்டன் ரகங்களான லுங்கி, வேட்டி, நைட்டி உள்ளிட்ட இரவு ஆடைகளின் விற்பனை கூடுதலாக இருந்தது. வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்பதால், காட்டன் ஆடை, உள்ளாடை, விரிப்புகள் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.

விஷம் குடித்த சிறுமி சாவுடி.என்.பாளையம், காட்டு வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியர் செல்வம்- மாலதி. இவர்களின், ௧௬ வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார். சிறுமி மொபைல்போனில் அடிக்கடி பேசியதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் சிறுமி நேற்று முன்தினம் சாணி பவுடர் குடித்து விட்டு, வீட்டில் மயங்கி கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்கொடை செலுத்த

'கியூ ஆர் கோடு' வசதி

கோபி அருகே பாரியூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு, அறநிலையத்துறையினர்ரசீது தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் நன்கொடை செலுத்த 'கியூ ஆர் கோடு' வசதியை அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனரும் வைத்துள்ளனர். நன்கொடை செய்த பக்தர்களின் மொபைல் எண்ணுக்கு, அதுகுறித்த தகவல் அனுப்பப்படும் என கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருவாய் துறையினர் உண்ணாவிரதம்

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட துணை தலைவர் கவிதா, மாநில துணை தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் ரமேஷ், பிற சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பேசினர்.

துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை, இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையிலான ஆணைகளை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கு புதிய துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணவிரதம் இருந்தனர். இதேபோல் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் போராட்டம் நடந்தது.

குழந்தை கடத்தல் வதந்தி

பரப்பினால் நடவடிக்கை

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில், பெண் குழந்தைகள் கடத்தப்படுவதாக, பெண் ஒருவர் பேசும் ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனால் மாநகர மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த ஆடியோ பதிவு தகவல் போலியானது என மாவட்டபோலீசார் உறுதி செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி., ஜவகர் கூறியதாவது: மாவட்டத்தில் பெண் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ போலியானது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படும். போலி ஆடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி

உதவியாளர் டிரான்ஸ்பர்

ஈரோடு மாநகராட்சி உதவியாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம், தஞ்சாவூர் மாநகராட்சி உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் அங்கு உதவியாளராக பணியாற்றிய மஞ்சு, ஈரோடு மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.

ரூ.38.61 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 1,079 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 82.60 ரூபாய் முதல், 88.59 ரூபாய்; இரண்டாம் தரம், 60.30 ரூபாய் முதல், 78.85 ரூபாய் வரை, 48,732 கிலோ கொப்பரை தேங்காய், 38 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

புதிய வணிக வளாகத்தை

தனியாருக்கு விட முடிவு

ஈரோடு ஆர்.கே.வி., ரோட்டில் செயல்பட்ட நேதாஜி காய்கறி மார்க்கெட், கொரோனா காலத்தில், வ.உ.சி., பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு, 709 காய்கறி கடை, 99 பழக்கடைகள் தற்போது செயல்படுகின்றன.

இந்நிலையில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், 15.65 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இங்கு, 250 வியாபாரிகளுக்கு மட்டுமே கடை ஒதுக்க முடியும்.

இதனால் அனைவருக்கும் கடைகள் ஒதுக்கும் வகையில், ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க, கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன்படி சோலாரில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் ஆர்.கே.வி., ரோடு வணிக வளாகத்தை தனியாருக்கு விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொது ஏலம் நடத்த

மாநகராட்சி தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன், ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில், 114 கடைகள், காளைமாடு சிலை வணிக வளாகத்தை, பொது ஏலத்தில் விட மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கனி மார்க்கெட் புதிய ஜவுளி வணிக வளாகத்தில், தரைத்தளம், முதல் தளம் மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளது. இரண்டாவது, மூன்றாவது தளங்கள் ஏலம் விடப்படவில்லை. அதேபோல் காளைமாடு சிலை அருகேயுள்ள வணிக வளாகமும் ஏலம் விடப்படவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன், இவற்றை பொது ஏலத்தில் விடுவது தொடர்பாக ஆலோசனே நடநது வருகிறது. வருவாயை கருத்தில் கொண்டு, கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் கூடுதலாக சில கடைகள் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு கூறினர்.

வளர்ச்சி திட்டப்பணிகள்குறித்து உயர்மட்ட கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான, உயர்மட்டக்குழு கூட்டம், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. வருவாய், பேரிடர் துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளில் நடந்து வரும் மக்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வளர்ச்சி பணிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பணிகளுக்கு முன்மொழிவு வழங்கவும், விரைவாக பணிகளை முடித்து ஒப்படைக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு, ஆர்.டி.ஓ.,க்கள் ஈரோடு சதீஷ்குமார், கோபி திவ்ய பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.

வீரக்குமாரசாமி கோவிலில்

தற்காலிக கடைகள் ஏலம்

வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவிலில், நடப்பாண்டு மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா, மார்ச், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை நடக்கிறது.

இதை முன்னிட்டு தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை அரங்குகள் அமைப்பதற்கான குத்தகை பொது ஏலம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் ராமநாதன் முன்னிலை வகித்தார். இதில் வெள்ளகோவில், புள்ளச்செல்லிபாளையத்தை சேர்ந்த குமாரசாமி, 4.20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

டூ வீலர் மீது மோதிய மான்இரு வாலிபர்கள் காயம்

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த வல்லரசு, 24, சுபாஷ், 25; இருவரும் தாராபுரத்தில் தங்கி கட்டட வேலை செய்கின்றனர். ஊதியூர் பகுதியில் வேலை முடிந்து, ஊதியூர்-தாயம்பாளையம் ரோட்டில் நேற்று முன்தினம் மாலை சென்றனர்.

ஒரம்பபுதுார் அருகே சென்றபோது நான்கு மான்கள் வேகமாக ரோட்டை கடந்துள்ளன. இதில் ஒரு மான் டூவீலரில் மோதியதில், இருவரும் தடுமாறி விழுந்தனர். பலத்த காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

ஊதியூர் மலையில் உள்ள மான்கள், மாலை நேரங்களில் தண்ணீருக்காகவும் சமவெளி பகுதியில் ரோட்டை கடந்து செல்வது வழக்கம். அவ்வாறு சென்றபோது விபத்து நேரிட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

கணவரை தாக்கியதாகமனைவி மீது வழக்கு

கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி, 43. அரசு பஸ் கண்டக்டர்; இவரின் மனைவி சுதா, 38; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடால் வேலுமணி சத்தியமங்கலத்தில் தனது தாயாருடன் வசிக்கிறார்.

கடந்த, 12ம் தேதி நஞ்சகவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மனைவி சுதா, கோபியை சேர்ந்த கார்க்திக்ராஜா, 37, ஆகியோருடன், தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சேர்ந்து, வேலுமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து வேலுமணி புகாரின்படி, இருவர் மீதும் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

'சுத்திகரிப்பு நிலையம் மீதுநடவடிக்கை எடுக்கணும்'

பெருந்துறை சிப்காட்டிலுள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, கடந்த ஜன., 29ம் தேதி வெளியேறிய கழிவு நீரில், 16,500 டி.டி.எஸ்., உப்புத்தன்மை இருந்ததாக, மக்கள் ஆதாரத்துடன் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், 16 நாட்களாகியும் பொது சுத்திகரிப்பு நிலையத்தின் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., பொது செயலாளர் சரவணன் தலைமையிலான கட்சியினர், நேற்று நேரில் சென்று விளக்கம் கேட்டனர். அவருடன் பெருந்துறை நகர தலைவர் பூர்ணசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

81 ஏக்கர் கோவில் நிலம் மீட்புஈரோடு மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீட்க நீண்ட காலமாக பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதன்படி மொடக்குறிச்சி வட்டம் குலவிளக்கு கோபால பெருமாள் கோவில், பொன்மலை குமாரசாமி கோவில், பெரிய சேமூர் செல்லாண்டியம்மன் கோவில், கங்காபுரம் விநாயகர் மாரியம்மன் மற்றும் கன்னிமார் வகையறா கோவில் உள்பட, 13 கோவில்களுக்கு சொந்தமான, 81.4 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, பல கோடி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகள் மாயம்

தந்தை புகார்

அம்மாபேட்டை அருகேயுள்ள குருவரெட்டியூர், பூலேரிகாட்டை சேர்ந்தவர் சத்யா, 23; இல்லம் தேடி கல்வித் திட்டத்தில், ஓலையூர் அரசு பள்ளியில் மாலை நேர வகுப்பு எடுத்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன் மாலை நேர வகுப்பு எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. இந்நிலையில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை ஆறுமுகம் தந்த புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

மல்லிகை கிலோ ரூ.1,080

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,080 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை பூ-1,190, காக்கடா-400, ஜாதி முல்லை-850, செண்டுமல்லி-27, கோழிகொண்டை-105, சம்பங்கி-60, அரளி பூ-100, துளசி-40, செவ்வந்தி- 160 ரூபாய்க்கும் விற்பனையானது.

ரூ.18.61 லட்சத்துக்குவிளைபொருள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. தேங்காய், 4,௦௦௦ காய்கள் வரத்தாகி, கிலோ, 18.25 - 25.75 ரூபாய் வரை விற்றது. தேங்காய் பருப்பு, 47 மூட்டை வரத்தாகி, கிலோ, 78.91 - 89.79 ரூபாய்; துவரை, 193 மூட்டை வரத்தாகி, கிலோ, 96.09 - 113.89 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் எள், ஆமணக்கு, தட்டைப்பயிறு தலா ஒரு மூட்டை வரத்தானது. பச்சை பயிறு ஒன்பது மூட்டை வரத்தாகி, 77 ஆயிரம் ரூபாய்; உளுந்து நான்கு மூட்டை வரத்தாகி, 25 ஆயிரம் ரூபாய்; கொள்ளு ஆறு மூட்டை வரத்தாகி, 31 ஆயிரம் ரூபாய்; நரிப்பயிறு, 15 மூட்டை வரத்தாகி ஒரு கிலோ, 90.22 - 95.26 ரூபாய்; அவரை ஒரு மூட்டை வரத்தாகி, 4,௦௦௦ ரூபாய்க்கும் விற்றது. அனைத்தும், 18.61 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொப்பரை, தேங்காய்ரூ.19.21 லட்சத்துக்கு ஏலம்கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 487 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 79 ரூபாய் முதல், 84.36 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 60.30 ரூபாய் முதல், ௮௦ ரூபாய் வரை, 18.44 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

இதேபோல் தேங்காய் ஏலத்துக்கு, 10,255 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 20.30 ரூபாய் முதல், 26.55 ரூபாய் வரை விற்றது. இரண்டும் சேர்த்து, 19.21 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு கொப்பரை தேங்காயை நாபெட் மூலம் ஒரு கிலோ, 106 ரூபாய் விலையில் கொள்முதல் செய்கிறது. அதை மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறது. இதனால் பிற கொப்பரை தேங்காய் விலை உயராத நிலை உள்ளது.

அதேநேரம் பருப்பு, கோதுமை, அரிசி போன்றவற்றை மதிப்புக்கூட்டி பாரத் டால், பாரத் ஆட்டா, பாரத் அரிசி என விற்பனை செய்கிறது.

அதுபோல கொப்பரை தேங்காயை மதிப்புக்கூட்டி தேங்காய் எண்ணெயாக பாரத் ஆயில் பெயரில் விற்கலாம். மலேசியாவில் இருந்து பாமாயிலை மானியத்துடன் இறக்குமதி செய்து, ரேஷன் கடைகளில் விற்கிறது. இதற்கு பதில் உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்யலாம்.

இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த சென்னையில் போலீஸ் அனுமதி மறுப்பதால், மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறினர்.

திருப்பூரில் நாளை

கல்விக்கடன் முகாம்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்களுக்காக, சிறப்பு கல்விக்கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை நடைபெறுகிறது. காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நடைபெறும் முகாமில், அனைத்து பொதுத்துறை, தனியார் வங்கி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவியர், vidhyalakshmi.co.in என்கிற இணையதளத்தில், உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்ப நகல், மாணவர் மற்றும் பெற்றோரின் புகைப்படம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், இருப்பிடச்சான்று, வருமான சான்று, பான் கார்டு, ஆதார் கார்டு, கல்லுாரியிலிருந்து பெறப்பட்ட கல்வி கட்டண விவரங்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மதிப்பெண் சான்று, முதல் பட்டதாரி எனில், அதற்கான சான்றுடன் முகாமில் பங்கேற்கவேண்டும்.

கவுன்சிலிங்கில் பெறப்பட்ட கல்லுாரி சேர்க்கைக்கான சான்றும் இணைக்கவேண்டும்.

காதலர் தினத்தால்

ரோஜா பூ விலை எகிறியது

காதலர் தினத்தால் ஈரோடு பூ மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு, பழைய நேதாஜி தினசரி மார்க்கெட் பகுதிகளில் உள்ள பூக்கடைகளில் விற்பனைக்காக, ரோஜா பூக்கள் நேற்றே குவிக்கப்பட்டது. ஒரு ரோஜா பூ சில்லரை விலையில், 35 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விற்றது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது: பெங்களூரு, ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் தருவிக்கப்பட்டது. மஞ்சள், சிவப்பு, பேபி பிங்க், டார்க் பிங்க், வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில், 20 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு, கடந்த வாரம் வரை, 100 ரூபாய் முதல், 180 ரூபாய் வரை விற்றது.

காதலர் தினத்தால், ஒரு கட்டு தரத்துக்கு ஏற்ப, 250 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. இதனால் சில்லரை விலையில் ஒரு ரோஜா பூ, 35 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இன்று வியாபாரம் சுமாராக இருந்தாலும், நாளை (இன்று) விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.

'உப்புமாவில் ரொம்ப உப்பு... மா'

இது தப்பும்மா... என எச்சரிக்கை

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், 17 பள்ளிகளில் அரசின் காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வெள்ளகோவில், டி.ஆர்.நகர் ஊராட்சி பள்ளியில், நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட உப்புமாவில், உப்பு அதிகமாக இருந்தது. இதனால் ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரிக்கை விடுத்து, சுவையாக வழங்க அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us