sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : பிப் 15, 2024 10:55 AM

Google News

ADDED : பிப் 15, 2024 10:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூதாட்டியை தாக்கி கொலை

மிரட்டல் விடுத்தவர் கைது

காங்கேயம் அருகே நிழலி, எல்லப்பாளையம் புதுார் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள், 60. அதே பகுதியை சேர்ந்தவர் இவரது உறவினர் முத்தன், 63. சில ஆண்டுகளுக்கு முன்பு முத்தன், பொன்னம்மாளிடம் மனைவியின் மருத்துவ செலவிற்காக வேண்டி நகையை அடகு வைக்க, 3.5 பவுன் நகையை கைமாத்தாக வாங்கியுள்ளார். முத்தன் இதுவரை திருப்பி தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பெட்டி கடைக்கு வந்த முத்தனிடம் பொன்னம்மாள் நகையை திருப்பித் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த முத்தன், தான் வைத்திருந்த கத்தியால் பொன்னம்மாளின் இடது கை, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டி காயத்தை ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த பொன்னம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஊதியூர் போலீசார் வழக்கு பதிந்து, முத்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரூ.18.20 லட்சத்தில் ஆர்.ஓ.,

கருவிகளை சீரமைக்க முடிவு

ஈரோடு சின்னசேமூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, காவேரி ரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மோளக்கவுண்டன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பழையபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அசோகபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட, 40 பள்ளிகளில் சுத்திகரிப்பு (ஆர்.ஓ.,) செய்யப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் வசதி உள்ளது. இதற்கு குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

ஆனால் பள்ளிகளில் சுத்திகரிப்பு கருவிகள் பழுதானதால், குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் உள்ளது. பள்ளிகளில் விரைவில் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளதால், முன்னதாக சுத்திகரிப்பு கருவிகளை பராமரிக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, சுத்திகரிப்பு கருவிகளை பராமரிக்கும் வகையில், 18.20 லட்சம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் மோதி ஒருவர் பலிஇருவர் படுகாயம்

வெள்ளகோவில் அருகே தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரகாஷ், 39, ராஜா, 38, ராமசாமி, 47, ஆகியோர் கம்பளியம்பட்டி சாலையில் பால் சொசைட்டி அருகே, நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மாருதி ஷிப்ட் கார், நின்று கொண்டிருந்த மூவர் மீதும் மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரகாஷ், ராஜா ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணில் நடமாடியதால்2 மணி நேரம் மின் தடை

கோபி துணை மின்நிலையம், வேட்டைக்காரன் கோவில் பகுதியில் இயங்குகிறது. அந்த துணை மின் நிலையம் மூலம், கோபி பஸ் ஸ்டாண்டு, பாரியூர்சாலை, மேட்டுவலவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், 11:30 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 'துணை மின்நிலையத்தில் அணில் நடமாடியதால், ஏற்பட்ட கோளாறால், மின் தடை ஏற்பட்டதாக' தெரிவித்தனர்.

பள்ளி மேலாண்மை குழுதலைவர்கள் மாநாடு

பள்ளி கல்வி துறை சார்பில், அரசு பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்.

மாவட்டத்தில் உள்ள, 1,288 அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளி கிழமை நடக்கிறது. குழு செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் கூட்டம் நடந்தது. சி.இ.ஓ. சம்பத், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், புன்செய் புளியம்பட்டி இன்ஸ்பெக்டராக பணியிடம் வழங்கி, ஈரோடு எஸ்.பி. ஜவகர் உத்தரவிட்டார். இவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

மாரடைப்பால் தலைமை

காவலர் மரணம்

சேலம் மாவட்டம் சங்ககிரி, வேங்கிபாளையம் நாடார் வீதியை சேர்ந்தவர் மோகன கணபதி, 49. இவர், பவானி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய மோகன கணபதி, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டார்.

அவரை, உறவினர்கள் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த மோகன கணபதிக்கு, சாந்தி என்ற மனைவி, மகா கணபதி என்ற மகன் உள்ளனர்.

ஆடு திருடிய இருவர் கைது

அந்தியூர் அருகே வேம்பத்தி ஏரி, தாளகுட்டைப்புதுாரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். கடந்த மாதம், 31ம் தேதி இப்பகுதிக்கு வந்த இருவர், அவரது பட்டியில் இருந்த செம்மறி ஆட்டை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து ஆடு திருடிய, பவானி வர்ணாபுரம் கவுரிசங்கர், 25, பவானி மேற்கு வீதியை சேர்ந்த மதியழகன், 26, ஆகியோரை கைது செய்தனர்.

ஈரோடு டி.எஸ்.பி.,பணியிட மாற்றம்

ஈரோடு டவுன் சப்-டிவிசன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஆறுமுகம், ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்ற பதிவேடுகள் பிரிவில் பணியாற்றி வந்த சேகருக்கு பணியிடம் ஏதும் வழங்கப்படவில்லை.

சாம்பல் புதன் அனுசரிப்புதாராபுரத்தில், சாம்பல் புதன் பண்டிகையை ஒட்டி, நேற்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன், 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் விரதம் அனுசரிப்பர். அதன்படி, முதல் நாளான நேற்று காலை, 6:00 மணியளவில் தாராபுரம் தாலுகா ஆபீஸ் அருகே உள்ள புனித ஞான பிரகாசியர் ஆலயத்தில், பங்கு தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பொறுப்பேற்புதாராபுரம் இன்ஸ்பெக்டராக இருந்த மணிகண்டன், பணி மாறுதலில் வேறு ஊருக்கு சென்றார். இதையடுத்து, ஊட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார், பணி மாறுதல் செய்யப்பட்டார். இவர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

கம்பம் சாய்ந்து

போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு, நாச்சியப்பாவீதி நால்ரோடு சந்திக்கும் பகுதியில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிக்னல் கம்பம் நடுரோட்டில் சாய்ந்தது.

இதனால் போக்குவரத்து தடைபட்டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து சவிதா சிக்னல் நோக்கி பஸ்கள் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று, போக்குவரத்துக்கு இடையூறாக தொங்கி கொண்டு இருந்த சிக்னல் கம்பத்தை அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து

சீரானது.

மொபட் - வேன் மோதி

மேஸ்திரி பரிதாப பலி

ஈரோடு அருகே, மொபட் மீது ஆம்னி வேன் மோதியதில் கட்டட மேஸ்திரி பலியானார்.

ஈரோடு அடுத்த, வண்ணாங்காட்டு வலசு செங்காரப்பாளையத்தை சேர்ந்தவர் மணி, 60, கட்டட மேஸ்திரி. நேற்று காலை மொபட்டில், ஈரோடு பூந்துறை சாலை அசோகபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேன் எதிர்பாராதவிதமாக மணியின் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் மணியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் தண்டபாணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.4.19 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை

மொடக்குறிச்சி உபஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 12,156 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 23.72 முதல், 25.79 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 4,316 கிலோ எடை கொண்ட தேங்காய், 1 லட்சத்து, 2,707 ரூபாய்க்கு விலை போனது.

அதுபோல, 152 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 78.75 முதல், 83.69 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 40.10 முதல், 71.20 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 4,250 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், மூன்று லட்சத்து, 16 ஆயிரத்து, 569 ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, நான்கு லட்சத்து, 19 ஆயிரத்து, 276 ரூபாய்க்கு விற்பனையானது.

அயோத்தியில் ராமரைதரிசிக்க 55 பேர் பயணம்

அயோத்தியில் ராமரை தரிசிக்க, சிறப்பு ரயில் மூலம் ஈரோட்டில் இருந்து, 55 பேர் புறப்பட்டனர்.

அயோத்தியில் உள்ள, பால ராமரை தரிசிக்க ரயில்வே மூலம் சிறப்பு ரயில் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து இயக்கப்படுகிறது. மூன்று ஊர்களில் இருந்தும் ஏற்கனவே தலா ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதன் மூலம், 1,626 பேர் இதுவரை அயோத்திக்கு சிறப்பு ரயில் மூலம் பயணித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ஈரோடு வழியே சிறப்பு ரயில் அயோத்திக்கு இயக்கப்பட்டது.

இதில் ஈரோட்டில் இருந்து, 55 பேர் பயணித்தனர். இதே போல் அயோத்தியில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்று மதியம், 1:00 மணியளவில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அயோத்தியில் பால ராமரை தரிசித்து வணங்கிய பின் ஈரோடுக்கு, 250 பேர் திரும்பியுள்ளனர்.

பெண் குழந்தைகள் கடத்தல்வதந்தியை நம்ப வேண்டாம்

ஈரோடு, கருங்கல்பாளையம், திருநகர் காலனி பகுதியில் பெண் குழந்தைகளை சிலர் கடத்துவதாக 'வாட்ஸ் ஆப்'களில் தற்போது பரவி வருகிறது. இது உண்மைக்கு புறம்பான தகவலாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டாம்.

வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரு நாட்களுக்கு முன்பே, போலீஸ் துறை மூலம் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்குஇன்று குறைதீர் கூட்டம்

ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் இன்று (15) காலை, 10:30 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் நடக்க உள்ளது. ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை வகிக்கிறார். ஈரோடு வருவாய் கோட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய தாலுகாக்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.

கட்டணம் செலுத்துவது குறித்து

மின்வாரிய அதிகாரி அறிவிப்பு

கோபி கரட்டடிபாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட நுகர்வோர்கள், முந்தைய மாதத்தின் மின் கட்டணத்தையே செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோபி மின் பகிர்மான வட்டம், கரட்டடிபாளையம் பிரிவு அலுவலகத்தில், பூதிமடை பகிர்மானத்துக்கு உட்பட்ட, 912 மின் இணைப்புக்கும், கருதாம்பாடிபுதுார் பகிர்மானத்துக்கு உட்பட்ட, 94 மின் இணைப்புக்கும், நிர்வாக காரணங்களால் பிப்ரவரி மாதம் கணக்கீடு நேரடியாக செய்ய இயலவில்லை. எனவே, கரட்டடிபாளையம் பிரிவு அலுவலக பகிர்மானத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் முந்தைய, 2023 டிசம்பர் மாதத்தின் மின் கட்டணத்தையே, மார்ச் மாத காலக்கெடுவுக்குள் செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.

இத்தகவலை, கோபி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

பெருந்துறை தாலுகா, குள்ளம்பாளையம், சீனாபுரம், திங்களூர், பெரிய வீரசங்கிலி பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும், 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தார்.

குள்ளம்பாளையத்தில் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், குள்ளம்பாளையம் - கணக்கம்பாளையம் வரை, 2.88 கி.மீ., நீளத்துக்கு, 1.13 கோடி ரூபாயில் நடந்து வரும் தார்ச்சாலை பணியை ஆய்வு செய்து, தரமாக அமைக்கப்படுவதை உறுதி செய்தார்.

சுள்ளிபாளையம் ரேஷன் கடை உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

சிவகிரியில் ரூ.48,000க்கு

நிலக்கடலை விற்பனை

ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 21 மூட்டைகளில் நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு

வந்தனர்.

ஒரு கிலோ நிலக்கடலை, 61.60 முதல், 76.16 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 647 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 48 ஆயிரத்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது.

சிதிலமடைந்த கட்டடம் இடித்து அகற்றம்

வெள்ளித்திருப்பூர் அடுத்த, செல்லம்பாளையம் மாதிரி பள்ளி அருகில் இருந்த சிதிலமடைந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

வெள்ளித்திருப்பூர் அடுத்த, செல்லம்பாளையம் மாதிரி பள்ளி அருகே இருந்த சிதிலமடைந்த கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து கடந்த, 20 நாட்களுக்கு முன், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கட்டடத்தில் அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள், அருகில் உள்ள பள்ளி விடுதி மாணவிகளிடம், சரக்கு அடிக்க தண்ணீர் கேட்டதாகவும் புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, கட்டடத்தை இடிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் காதர், அந்தியூர் தாசில்தார் மற்றும் எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கினார். இது சம்பந்தமாக நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், இதன் மேல் நடவடிக்கையாக கட்டடத்தை இடிக்க, அந்தியூர் தாசில்தார் கவியரசு உத்தரவிட்டார். நேற்று சிதிலமடைந்த கட்டடத்தை வருவாய் துறையினர் இடித்தனர்.






      Dinamalar
      Follow us