தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மூலப்பொருள், எரிபொருள் தட்டுப்பாடு: முறுக்கு கம்பி டன்னுக்கு ரூ.8,000 உயர்வு

மூலப்பொருள், எரிபொருள் தட்டுப்பாடு: முறுக்கு கம்பி டன்னுக்கு ரூ.8,000 உயர்வு

மூலப்பொருள், எரிபொருள் தட்டுப்பாடு: முறுக்கு கம்பி டன்னுக்கு ரூ.8,000 உயர்வு


ADDED : ஏப் 25, 2017 08:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2017 08:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: மூலப்பொருள், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், முறுக்கு கம்பியின் விலை, டன்னுக்கு, 8,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஸ்டீல் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் அக்னி சின்னசாமி கூறியதாவது: அனல் மின் நிலையம், இரும்பு உருக்குதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு அவசியமான நிலக்கிரியின் விலை, தற்போது, டன்னுக்கு, 5,000 ரூபாய் உயர்ந்துள்ளது. இரும்பு உருக்க தேவையான மூலப்பொருள் மற்றும் நிலக்கரி தட்டுப்பாட்டால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ஒரு டன் ஸ்டீல் கம்பியின் (முறுக்கு கம்பி) விலை, 8,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. முன், ஒரு டன் முறுக்கு கம்பி, 36 ஆயிரம் முதல், 37 ஆயிரம் ரூபாயாக இருந்து, தற்போது, 45 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போதைய வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு, நிலங்கள் விற்பனை, பணப்பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் கட்டுமான பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. தமிழகத்தில் முறுக்கு கம்பி உள்ளிட்ட இரும்பு கம்பிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம், மாதம், இரண்டு லட்சம் டன் கம்பி உற்பத்தி செய்யப்படும். ஆனால், தற்போது உற்பத்தி குறைந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க தீ விபத்தால், நிலக்கரி விலை உயர்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரும்பு கம்பி விலையேற்றத்தை குறைக்க, தட்டுப்பாடு இல்லாமல், குறைந்த விலைக்கு நிலக்கிரி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us