தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசுப்பள்ளி கட்ட ரூ.4 கோடி மதிப்பு நிலம் தானம்: 80 வயது முன்னாள் பெண் ஹெச்.எம்., தாராளம்

அரசுப்பள்ளி கட்ட ரூ.4 கோடி மதிப்பு நிலம் தானம்: 80 வயது முன்னாள் பெண் ஹெச்.எம்., தாராளம்

அரசுப்பள்ளி கட்ட ரூ.4 கோடி மதிப்பு நிலம் தானம்: 80 வயது முன்னாள் பெண் ஹெச்.எம்., தாராளம்


ADDED : பிப் 18, 2018 09:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2018 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: அரசுப்பள்ளி கட்டடம் கட்ட, நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான, ஒரு ஏக்கர் நிலத்தை, தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு, பாராட்டு விழா நடந்தது.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 2 வகுப்பு தொடங்கவுள்ளது. ஆனால், போதிய இடவசதியில்லை. இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த, ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம், ஒரு ஏக்கரை, தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு, நான்கு கோடி ரூபாயாகும். இவருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார். நிலத்தை தானம் செய்வதற்கான, பத்திரத்தை அவரிடம் வழங்கினார்.



மூதாட்டியின் பரந்த மனசு: சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த குமார நடராஜ வரதப்பன் மனைவி பொன்மணிதேவி, 80; கடந்த, 1964 முதல், ஆசிரியையாக பணிபுரிந்தார். கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில், 1996ல் ஓய்வு பெற்றார். இவரது கணவர், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார். இதனால் தன் சகோதரி மாரத்தாள், அவரின் மகன்கள் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். கடந்த, 2006ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட, 25 சென்ட் நிலம் வழங்கினார். தற்போது, சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில், அப்பத்தாள் திருமண மண்டபம் அருகிலுள்ள, நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான, ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்து, தன் வள்ளல் குணத்தை நிரூபித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us