தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/10 ஆயிரம் மூட்டை வெல்லம் உற்பத்தி பாதிப்பு : போதிய நீரின்றி 30 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாசம்

10 ஆயிரம் மூட்டை வெல்லம் உற்பத்தி பாதிப்பு : போதிய நீரின்றி 30 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாசம்

10 ஆயிரம் மூட்டை வெல்லம் உற்பத்தி பாதிப்பு : போதிய நீரின்றி 30 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாசம்


ADDED : ஜூன் 19, 2013 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2013 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டத்தில், 30 ஆயிரம் ஏக்கர் கரும்பு தண்ணீரின்றி கருகியுள்ளதால், வெல்ல உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 1.40 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். இதில், 80 ஆயிரம் ஏக்கரில் கரும்புகள் அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படும். பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து மட்டுமே, சர்க்கரை ஆலைகள், கரும்பை கொள்முதல் செய்வதால், வேறு வழியின்றி வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை பணியில் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டாக பருவமழை பொய்த்ததை தொடர்ந்து, கரும்பு சாகுபடி பரப்பளவு, 20 முதல், 30 சதவீதம் வரை குறைந்து காணப்பட்டது.

உருண்டை மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்க, போதிய கரும்பு கிடைக்காததால், ஈரோடு மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளன. வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்ட, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பு குறைந்த காரணத்தால், விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் கவுந்தப்பாடி மற்றும் சித்தோட்டில் உள்ள சர்க்கரை மார்க்கெட்டில் தான் அதிகளவு வெல்லம் ஏலம் நடக்கிறது. இந்த மார்க்கெட்டில், 60 கிலோ நாட்டு சர்க்கரை மூட்டை, 1,450 ரூபாயில் இருந்து, 1,950 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அச்சு வெல்லம், 30 கிலோ மூட்டை, 1,100 முதல், 1,200 ரூபாய் வரையிலும், உருண்டை வெல்லம், 30 கிலோ மூடை, 1,250 ரூபாயில் இருந்து, 1,480 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு சர்க்கரை மற்றும் வெல்ல உற்பத்தியாளர்களுக்கு இது கட்டுப்படியான விலை இல்லை, என குமுறி வருகின்றனர்.

ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் வரத்து அதிகமாக இருக்கும். இரண்டு மார்க்கெட்டுக்கும் சராசரியாக, 25 ஆயிரம் மூட்டை வரை வரத்தாகும். பருவமழை பொய்த்ததால், மாவட்டம் முழுவதும், 50 ஆயிரம் ஏக்கர் கரும்பு, தண்ணீரின்றி கருகி காணப்படுகிறது. இதனால், இரண்டு மார்க்கெட்டுக்கும், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் மூட்டைகளே வெல்லம் வரத்தாகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பாசனப்பகுதிகளில் தண்ணீரில்லாததால் கிணறு, போர்வெல் உள்ளிட்டவை மூலம் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரம் ஏக்கர் கரும்பு, தண்ணீரின்றி கருகி காணப்படுவதால், நடப்பாண்டு வெல்லம் தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எல்.பி.பி., பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கோபி சுற்று வட்டாரத்தில் நாகதேவன்பாளையம், நாதிபாளையம், சந்திராபுரம், வெள்ளாங்கோவில் உட்பட மாவட்டம் முழுவதும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு, சில நாட்கள் பெய்த மழை, மீண்டும் பொய்த்து விட்டதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் கரும்பு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மாவட்டம் முழுவதும், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு கருகி காணப்படுகிறது. கரும்பு பயிருக்கு வறட்சி நிவாரணத்தை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துள்ளனர். வறட்சி நிவாரணம் உடனடியாக கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us