/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகரில் புதிய பணிகளை தொடங்கி வைத்த நீலகிரி எம்.பி.,
/
பவானிசாகரில் புதிய பணிகளை தொடங்கி வைத்த நீலகிரி எம்.பி.,
பவானிசாகரில் புதிய பணிகளை தொடங்கி வைத்த நீலகிரி எம்.பி.,
பவானிசாகரில் புதிய பணிகளை தொடங்கி வைத்த நீலகிரி எம்.பி.,
ADDED : செப் 24, 2024 03:03 AM
புன்செய்புளியம்பட்டி: நீலகிரி எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டசபை தொகுதி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், பவானிசாகர் பேரூராட்சியில், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டியும், நீலகிரி எம்.பி., ராசா நேற்று தொடங்கி வைத்தார். நல்லுார் ஊராட்சி எரங்காட்டுப்பாளையம் கிராமத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் முல்லை நகரில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பனையம்பள்ளி ஊராட்சி சொலவனுார் கிராமத்தில், பயணிகள் நிழற்கூடம்; உத்தண்டியூர் ஊராட்சி ஆலாம்பாளையத்தில்
தார்ச்சாலையை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பவானிசாகர் பேரூராட்சியில் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட, அமுதம் அங்காடி நியாய விலை கடையை திறந்து வைத்து, மக்களுக்கு பொருட்கள் வழங்கினார்.சத்தியில்...சத்தி நகராட்சி பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தும், முடியும் தருவாயில் உள்ள பணிகளையும், எம்.பி., ராசா பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:சினிமாவில் இருந்தவர் துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் திருமா ஆக கூடாதா? என, அக்கட்சி துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு
ராசா பதில் கூறியதாவது:திருமாவளவன், 40 ஆண்டுகளாக எனக்கு நன்கு அறிமுகம். தி.மு.க.,வோடு இணக்கமாக உள்ளார். கொள்கை புரிதல் இல்லாதவர் கூறிய கருத்தை, அவர் நிச்சயமாக ஏற்கமாட்டார். ஏற்க கூடாது என்று நானும்
நம்புகிறேன். விரைவில் அவர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு எம்.பி., ராசா கூறினார்.