/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க.,வை யாரும் அசைக்க முடியாது: மனோ தங்கராஜ்
/
தி.மு.க.,வை யாரும் அசைக்க முடியாது: மனோ தங்கராஜ்
ADDED : நவ 27, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ''தி.மு.க.,வை எந்த சூழ்நிலையிலும், யாரும் எளிதில் அசைத்து பார்க்க முடியாது,'' என, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சித்தோட்டில் கூறினார்.
பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.,வை தேர்வு செய்துள்ளார். தி.மு.க., ஒரு ஆலமரம். எவ்வளவு கல்லடிபட்ட கட்சி. அனைத்துக்கும் பழக்கப்பட்ட கட்சி. மிக உறுதியான கொள்கையும், தலைமையும், சீரிய தொண்டர்கள் கொண்ட தி.மு.க.,வை எந்த சூழ்நிலையிலும் யாரும் எளிதில் அசைத்து பார்க்க முடியாது.
இவ்வாறு கூறினார்.

