/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'சீமான் பிரசாரத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது'
/
'சீமான் பிரசாரத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது'
'சீமான் பிரசாரத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது'
'சீமான் பிரசாரத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது'
ADDED : ஜன 19, 2025 07:02 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்த வேட்பாளர் சீதாலட்சுமி, நேற்று நடந்த மனு பரிசீலனையில் பங்கேற்று, தன்னுடைய மூன்று மனுக்களும் ஏற்கப்பட்டதாக தெரிவித்தார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., தரப்பில் என்னை அணுகி, வாபஸ் பெறும்படி பேசியதாக பரவும் தகவல் பொய்யானது. நான் வேட்பாளராக நிற்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவிப் பதுடன், போட்டியிட வலியுறுத்துகின்றனர்.
இப்பிரச்னை குறித்து நானும் சீமானிடம் பேசவில்லை.பிரசாரத்துக்கு அனுமதி கோரி, தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் விண்ணப்பித்துள்ளோம். நேரம் கிடைப்பதற்கு ஏற்ப பிரசாரத்தை தொடர்வோம். ஈரோட்டில் பிரசாரத்துக்கு சீமான் வருவது பற்றி, தலைமை தேதியை அறிவிக்கும்.போராட்டம் நடத்தப்பட்டாலும், சீமான் பிரசாரத்துக்கு வருவதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. சீமான் கூறிய கருத்துக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதை நாம் காண முடிகிறது. அவர் தவ-றாக பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

