தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தி.மு.க.,வுக்கு ஆதரவு

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தி.மு.க.,வுக்கு ஆதரவு

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தி.மு.க.,வுக்கு ஆதரவு


ADDED : ஏப் 16, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம் : தாராபுரத்தில் நடந்த கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு தருவது என, முடிவு செய்யப்பட்டது.

தாராபுரத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

சங்கத் தலைவர் காளிமுத்து கூறியதாவது: செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டாக்டர் இந்திராணிக்கு ஆதரவளிப்பது என, தீர்மானித்து உள்ளோம். தி.மு.க.,வை ஏன் ஆதரிக்கிறோம் என்றால், ஏற்கனவே விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பின், கருணாநிதி ஆட்சி காலத்தில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது போன்ற விவசாயிகளுக்கு நலன் தரும் திட்டங்களை நிறைவேற்றியதற்காக ஆதரவளிக்கிறோம். மேலும், நெல்லுக்கு கூடுதல் விலை, கரும்புக்கு கூடுதல் ஊக்கத்தொகை தருவதாக கூறியுள்ளனர். எனவே, இம்முறை, தி.மு.க.,வை ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, தி.மு.க. வேட்பாளர் இந்திராணியை நேரில் சந்தித்த விவசாய சங்க நிர்வாகிகள், அவருக்கு சால்வை அணிவித்து ஆதரவை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us