/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : நவ 30, 2024 02:19 AM
ஈரோடு: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக உருவெ-டுத்ததால், ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று பர-வலாக மழை
பெய்தது.
ஈரோட்டில் நேற்று காலை லேசான சாரல் மழை தொடங்கியது. விட்டு விட்டு மாலை வரை தொடர்ந்தது. மழையால் மாநகரில் பருவநிலை இதமாக மாறி, குளுகுளு காற்று வீசியது.* -------------------பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்-வப்போது சிறிது நேரம் மிதமாக பெய்து, இரவிலும் மழை நீடித்-தது.
* நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மலையப்பா-ளையம் எம்மாம்பூண்டி, பொலவபாளையம், மூனாம்பள்ளி, குரு-மந்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு தொடங்கிய துாறல் மழை மாலை வரை வரை தொடர்ந்தது.
* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தவிட்டுப்பா-ளையம், புதுமேட்டூர், சின்னதம்பிபாளையம், நகலுார், முனியப்-பன்பாளையம், பிரம்மதேசம், வேம்பத்தி, ஆப்பக்கூடல், ஓசை-பட்டி, கரட்டுப்பாளையம் பகுதிகளில், நேற்று பகல் முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தபடியே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
தாராபுரத்தில் சாரல் மழை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நேற்று காலை, 7:00 மணி முதலே, லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அவ்வப்-போது சிறு இடைவெளி விட்டு சாரல் மழையாக, மதியம், ௩:௦௦ மணி வரை நீடித்தது. இதனால் நகரில் இதமான சூழல் நிலவி-யது. இதேபோல் உப்புத்துறை பாளையம், கொண்டரசம்பா-ளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், லேசான மழை பெய்தது.
காங்கேயத்தில் பாதிப்பு
காங்கேயம் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை முதலே இடைவிடாமல் துாறல் மழை பெய்தது. இதனால் கடும் குளிர் நிலவ, மக்கள் வீடுகளில் முடங்கினர். கடைவீதிகளிலும் கூட்டம் குறைந்தது.