sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாறலால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை

/

துாறலால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை

துாறலால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை

துாறலால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை


ADDED : நவ 25, 2025 01:19 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று காலை, 6:௦௦ மணி முதல் லேசான மழை துாறல் விழுந்தது. 7:30 மணிக்கு வேகமெடுத்து, 15 நிமிடங்கள் நீடித்தது. பிறகு, 8:45 மணி முதல், 9:45 மணி வரை லேசான சாரல் தொடர்ந்தது. இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் சிரமத்துக்கு ஆளாகினர்.

* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான, சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், பச்சாம்பாளையம், எண்ணமங்கலம், காட்டூர், பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காலை, 6:௦௦ மணிக்கு தொடங்கிய துாறல் மழை, 10:00 மணி வரை நீடித்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், பட்லுார் நால்ரோடு, சென்னம்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு துாறல் மழை பெய்தது.

* கோபியில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல், 6:00 மணி வரை சாரல் மழை பெய்தது. கோபி, கரட்டூர், குள்ளம்பாளையம், பா.வெள்ளாளபாளையம், நாதிபாளையம், கங்கம்பாளையம், பொலவக்காளிபாளையம், பாரியூர் உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்தது. அதன்பின் விட்டு விட்டு சாரல் மழை பெய்தும், வானம் மேகமூட்டமாகவும் காணப்பட்டது.

* டி.என்.பாளையம் மற்றும் டி.ஜி.புதுார், வாணிபுத்துார், கொங்கர்பாளையம், பங்களாபுதுார், புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம் பகுதிகளில் காலை, 8:30 மணி முதல் மதியம், 1.00 மணி வரை கனமழை, மித மழை என மாறி மாறி பெய்தது. மொத்தத்தில் துாறல், சாரல் மழையால், மாநகர் மற்றும் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us