/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைவிடாத மழையால் பாதித்த இயல்பு நிலை
/
இடைவிடாத மழையால் பாதித்த இயல்பு நிலை
ADDED : டிச 14, 2024 01:26 AM
ஈரோடு, டிச. 14-
ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் மழையால், இயல்பு வாழ்க்கை பாதித்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், ஈரோடு மாவட்டத்தில் கடும் மழை பெய்யாவிட்டாலும், இடைவிடாது மேக மூட்டத்துடனும், அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை, மாலையில் பள்ளி, கல்லுாரி செல்வோர், அலுவலகம் சென்று திரும்புவோர் பாதிக்கும் வகையில் மழை பெய்ததால், மக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்ல சிரமப்பட்டனர். கடை வீதிகள், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலும் கூட மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. சாலைகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை என்றாலும், குழிகளில் தண்ணீர் தேங்கியும், இயல்புக்கு மாறாகவும் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடைகளிலும் விற்பனை குறைந்தது. தொடர் மழையால் பெரிய சடையம்பாளையம் குட்டை, முத்தம்பாளையம் குட்டைகளில் மழை நீர் நிரம்பியது. முத்தம்பாளையம் மழை நீர் சேகரிப்பு குட்டையில் தண்ணீர் நிரம்பி, அருவி போல வழிந்தோடுகிறது.
* சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், 8:00 மணி வரை சாரல் மழை தொடர்ந்து துாறியது. பின் இடைவெளி விட்டு சாரல் மழை பெய்தது.
* ஆப்பக்கூடல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், 9:30 மணி வரை, மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

