/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சை புல்வெளி அல்ல; பாழான பவானி ஆறு
/
பச்சை புல்வெளி அல்ல; பாழான பவானி ஆறு
ADDED : ஜூலை 26, 2025 01:03 AM
பவானி, பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு வழியாக வரும் தண்ணீர், காளிங்கராயன் அணைக்கட்டு வழியாக கூடுதுறையில் முக்கூடலில் சங்கமிக்கிறது.
இதில் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து கூடுதுறையில் சங்கமிக்கும் பகுதி வரை, பவானி ஆறு ஆகாயத்தாமரைகளால் சூழ்ந்து பச்சை கலரில் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி நகர்பகுதி குடியிருப்பு கழிவுநீர், சாய ஆலைகளின் கழிவு நேரடியாக பவானி ஆற்றில் கலக்கிறது.
இதனால் ஆகாயத்தாமரை வளர்ந்து படர்ந்து இருக்கிறது. புனித நதி என்று பெருமை பேசும் மக்களும், சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்களும் ஒன்றிணைந்தே பவானி நதியை மாசாக்கி வருகின்றனர். நதியை மாசாக்கி நஞ்சாக்குவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. ஆற்றங்கரையில் தான் நாகரிகம் பிறந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றோ ஆறுகள், மெகா கழிவுநீர் சாக்கடையாக மாறி வருகின்றன. குடிநீருக்கு பயன்படுத்தும் ஆற்றுநீரை நஞ்சாக்கும் மனித சமூகத்துக்கு, இயற்கை பாடம் புகட்டும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.