/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கட்டணம் குறித்து செயற்பொறியாளர் அறிவிப்பு
/
மின் கட்டணம் குறித்து செயற்பொறியாளர் அறிவிப்பு
ADDED : ஆக 28, 2024 07:26 AM
கோபி: கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோபி மின் பகிர்மான வட்டம், புதுப்பாளையம் பிரிவு அலுவலகத்தில், கரட்டூர் பகிர்மானத்துக்கு உட்பட்ட டி.ஆர்.ஆர்., நகர், மாரியம்மன் கோவில் வீதி, சீதாலட்சுமி கல்யாண மண்டபம் முதல், கரட்டூர் பெட்ரோல் பங்க், அண்ணா நகர், கே.டி.எஸ்., நகர், ஜே.ஜே., நகர், பிள்ளையார் கோவில் வீதி, சீதாலட்சுமி கல்யாண மண்டபம் முதல், கரட்டூர் பெட்ரோல் பங்க் வரை, பஸ் ஸ்டாண்ட் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட எஸ்.டி.என்., காலனி, கோபி பகுதிகளில் நிர்வாக காரணத்தால் ஆக., மாத மின் கட்டண கணக்கீடு செய்யவில்லை.
எனவே நுகர்வோர் கடந்த ஜூன் மாத கட்டணத்தை செலுத்த கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

