ஈரோட்டில் பூங்கொத்து கொடுத்துசெவிலியர் தினம் கொண்டாட்டம்
ஈரோட்டில் பூங்கொத்து கொடுத்துசெவிலியர் தினம் கொண்டாட்டம்
ADDED : மே 13, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
ஈரோடுஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின், புதிய பல்துறை மருத்துவமனை கட்டடத்தில் உள்ள, 4 வது தளத்தில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
அனைத்து செவிலியர்களுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகா ஆகியோர் பூக்கள், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து
வரவேற்றனர். மூத்த செவிலியர் உமா, அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேர்ள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து இனிப்பு வழங்கி, செவிலியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.சிகிச்சைக்கு வந்தவர்கள், உடனிருந்தோர், பொதுமக்கள் என அனைவரும் செவிலியர் களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
