/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் மூழ்கி நர்சின் கணவர் பலி
/
பவானி ஆற்றில் மூழ்கி நர்சின் கணவர் பலி
ADDED : அக் 25, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே ஜம்பை குண்டுசொட்டிபாளையத்தை சேர்ந்தவர் பேபி, 26; ஹோம் நர்சாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் நித்யானந்தன், 30; பவானி அருகே சேர்வராயன்பாளையம் அவுட்டர் பைபாஸ் சாலையில் பவானி ஆற்றில், நேற்று முன்தினம் ஆண் சடலம் மிதந்தது.
பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பவானி போலீசார் விசாரணையில், நித்தியானந்தன் என்பது தெரிந்தது. கடந்த, 19ம் தேதி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றவர், ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

