ADDED : நவ 13, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
பெருந்துறை:தமிழ்நாடு
செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், பெருந்துறை அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து, செவிலியர்கள்
நேற்று பணிபுரிந்ததுடன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும்
ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெயசுகி தலைமை வகித்தார்.
6,500
தொகுப்பூதிய செவிலியர்களை, காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம்
செய்யும் அரசின் முடிவை கை விட்டு, செவிலியர்களை முழு ஊதியத்தில் பணி
நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
