/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் போராட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் போராட்டம்
ADDED : பிப் 14, 2026 08:53 AM

ஈரோடு: தமிழக சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நேற்றும் தர்ணா போராட்டத்தில், ஒப்பாரி வைத்து ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். போராட்டத்தின்போது நம்பியூரை சேர்ந்த சத்துணவு பணியாளர் சாந்தி திடீரென மயங்கினார். முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
* சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலர் வெங்கிடு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

