சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மறியல்; ஈரோட்டில் 625 பேர் கைது
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மறியல்; ஈரோட்டில் 625 பேர் கைது
ADDED : பிப் 05, 2026 04:26 AM

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று, 2வது நாளாக மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் ஆர்ப்-பாட்டம் செய்து, பின், திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செயலர் பழனிசாமி, வணிக வரித்துறை அலுவலர் சங்க துணை பொதுச் செயலர் சாமிகுணம் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். நிர்வாகிகள் உஷாராணி, வெங்கிடு உட்பட பலர் பேசினர்.
தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள, 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் பணி மூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு, 12 மாதம் மகப்-பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மறியலில் ஈடுபட்ட, 15 ஆண்கள் உட்பட, 625 பேர் கைது செய்யப்பட்டனர்.
