ADDED : ஆக 02, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தீரன்
சின்னமலை, 221வது நினைவு நாள், அறச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் நாளை
அனுசரிக்கப்படுகிறது.
இதற்காக அஞ்சலி செலுத்த வருவோர், மக்கள்,
அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை குறித்த கலந்தாய்வு
கூட்டம் நடந்தது. அஞ்சலி செலுத்த ஒதுக்கப்பட்ட நேரத்தில்,
சம்பந்தப்பட்டவர்கள் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. மோட்டார்
வாகன விதிகளை கடைபிடிக்க வேண்டும். மக்களுக்கு இடையூறின்றி வந்து
செல்ல வேண்டும். கட்சி, அமைப்பு கொடிகளை மணிமண்டபத்துக்குள் எடுத்து
செல்ல அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டது. அந்தந்த
மாவட்டத்தில் இருந்து வரவேண்டியவர்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில்தான் வரவேண்டும் என்றும், போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
