ADDED : பிப் 07, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த பாலசுப்ரமணிய நகரில், கஞ்சா விற்பனை நடப்பதாக, தாராபுரம் போலீசா-ருக்கு தகவல் போனது. இதையடுத்து எஸ்.ஐ., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், நேற்று காலை சோதனை மேற்-கொண்டனர்.
அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக பையுடன் திரிந்த வாலிப-ரிடம் விசாரித்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் தெகுரி, 38, என்பது தெரிந்தது. அவன் வைத்திருந்த பையில், 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. தெகுரியை கைது செய்து கஞ்-சாவை பறிமுதல் செய்தனர்.
