ADDED : ஜன 14, 2026 07:19 AM
திருப்பூர்: ஹிந்து அறநிலையத்துறை சார்பில், ஒருகால பூஜை திட்ட கோவில் பூசாரிகளுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறநிலையத்துறை உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். அலுவலக தலைமை எழுத்தர் சாந்தி வர-வேற்றார். அறங்காவலர் மாவட்ட குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர், ஒருகால பூஜை திட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு, இரண்டு வேட்டி மற்றும் இரண்டு துண்டு வழங்-கினர்.
தமிழ்வாணன் பேசுகையில், ''தமிழக அரசின், ஒரு கால பூஜை திட்டத்தில், மாவட்டத்தில், 575 கோவில்களில் பூஜை நடந்து வருகிறது. தலா, 2.50 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்து, அதிலி-ருந்து கிடைக்கும் வட்டி தொகையில், ஒருகால பூஜை நடந்து வருகிறது.
அர்ச்சகர்கள், டூ வீலர் வாங்கினால், 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். குழந்தைகள், பட்டம் படிக்கும் போது, ஆண்-டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவியாக வழங்கப்படுகிறது. அரசு திட்டத்தை தகுதியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது, 575 கோவில் அர்ச்சகர்களுக்கும், வேட்டி துண்டு 2 செட் வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

