sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிப்காட் சாலை பணி மோசம் விளக்கம் அளித்த அதிகாரி

/

சிப்காட் சாலை பணி மோசம் விளக்கம் அளித்த அதிகாரி

சிப்காட் சாலை பணி மோசம் விளக்கம் அளித்த அதிகாரி

சிப்காட் சாலை பணி மோசம் விளக்கம் அளித்த அதிகாரி


ADDED : பிப் 19, 2026 04:19 AM

Google News

ADDED : பிப் 19, 2026 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: பெருந்துறை சிப்காட் வளாகத்தில், ஆறா வது குறுக்கு சாலையில் தார்ச்சாலை தரமற்று அமைக்கப்பட்டதாக, நேற்று முன்தினம் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

அதற்கு சிப்காட் திட்ட அலுவலர் சுஜா பிரியதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ''குறிப்பிட்ட அந்த பகுதியில் சாலை பணிகள் முழுமையாக இன்னும் நிறைவடையவில்லை, பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும்போதே, அதிக எடையுள்ள கனரக வாக-னங்கள் அந்த வழியே சென்றதால் மட்டுமே, ஜல்லிகள் பெயர்ந்து இத்தகைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இது முதற்கட்ட பணிதான். விரைவில் அந்த இடத்தில் மற்றொரு அடுக்கு தார் போடப்பட்டு, சாலை பலப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அச்சப்படத் தேவையில்லை. தரத்-துடனேயே சாலை பணிகள் முடிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us