எத்தனால் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் அதிகாரிகள் உறுதியால் கைவிட்ட மக்கள்
எத்தனால் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் அதிகாரிகள் உறுதியால் கைவிட்ட மக்கள்
ADDED : நவ 27, 2026 06:55 AM

பவானி:அம்மாபேட்டை
அருகே பூனாட்சியில் தனியார் எத்தனால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
உள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயனக் கழிவால், சித்தாறு
ஓடை மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. மக்களுடன்,
கால்நடைகளும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை என்று புகார்
தெரிவித்து, கடந்த மாதங்களில் இப்பகுதி கிராம மக்கள் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டத்தில் வேறு வழியின்றி,
கடந்த வாரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து,
எத்தனால் உற்பத்தி பிரிவுக்கு மட்டும் சீல் வைத்தனர். ஆனாலும் ஆலை தொடர்ந்து இயக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதை
கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், ஆக்கு முன்பாக உள்ள நத்தமேடு
பிரிவில், அம்மாபேட்டை -- அந்தியூர் சாலையில் நுாற்று-க்கும்
மேற்பட்ட மக்கள், நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை போலீசார், வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
'தங்களது
வாழ்வாதாரம், உயிரை பாதுகாக்க, இந்த எத்தனால் ஆலையை நிரந்தரமாக மூட
வேண்டும். அப்படி மூடும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை.
அடுத்தகட்ட நகர்வுக்கு செல்வோம்' என்று, மக்கள் தெரிவித்தனர்.
உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை
தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
