/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் கேட்டு மறியலால் அதிகாரிகள் ஆலோசனை
/
குடிநீர் கேட்டு மறியலால் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஜூலை 04, 2025 01:02 AM
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் யூனியனுக்கு உட்பட்ட நல்லுார், தொப்பம்பாளையம் பஞ்., மக்கள், குடிநீர் கேட்டு கடந்த இரு தினங்களுக்கு முன் இருவேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமாசங்கர், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் நந்தினி, பி.டி.ஓ.,க்கள் இந்திராணி, பிரகாஷ் மற்றும் 15 ஊராட்சி செயலாளர் பங்கேற்ற பேச்சுவார்த்தை, பவானிசாகர் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மக்கள் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
இதில் தொப்பம்பாளையம், நல்லுார் மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பஞ்., பகுதிகளில், ஒரு வாரத்துக்குள் பிரச்னை சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.