/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோரம் கிடந்த காலாவதியான மருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
/
சாலையோரம் கிடந்த காலாவதியான மருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
சாலையோரம் கிடந்த காலாவதியான மருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
சாலையோரம் கிடந்த காலாவதியான மருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
ADDED : நவ 20, 2025 02:25 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பொத்திபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அவினாசிபாளையம் புதுாரில், சாலையோரம் மூட்டைகள் கிடந்துள்ளன. அப்பகுதி மக்கள் பிரித்து பார்த்த போது, உள்ளே தமிழக அரசின் முத்திரை பதித்த மருந்து பாட்டில்கள், சிரஞ், மாத்திரைகள் பெட்டி பெட்டியாக இருந்துள்ளது. இவை அனைத்தும், கடந்த பிப்ரவரி மாதமே காலாவதியான மருந்துகள். நேற்று காலை சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற உதவி திட்ட மேலாண்மை இயக்குனர் (மாவட்ட சுகாதாரத்துறை-, பூலுவப்பட்டி) ரமணன், மாவட்ட சுகாதாரத்துறை இரண்டாம் நிலை அதிகாரி ஸ்ரீநிவாசன், சாவடிபாளையம் சுகாதார நிலைய மருத்துவர் விஜயக்குமார்,
பச்சாபாளையம் சுகாதார நிலைய மருத்துவர் சங்கரி ஆகியோர் மருந்துகளை ஆய்வு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்.' மருந்துகள் அனைத்தும் குள்ளம்பாளையத்தில் உள்ள மருந்து கிடங்கில் இருந்து, அரசு சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவை. யார் இங்கு வந்து கொட்டியது என தெரியவில்லை. விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவர் விஜயக்குமார் தலைமையில் மருந்துகள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டு, கோவை அனுப்பப்பட்டு அழிக்கப்படும்,' என்றனர்.

