தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகள் ஆய்வால் பரபரப்பு

கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகள் ஆய்வால் பரபரப்பு

கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகள் ஆய்வால் பரபரப்பு


ADDED : நவ 15, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை:ஈரோடு மாவட்டத்தில், 190 பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் சென்னிமலை பகுதியில் மட்டும், 40க்கும் மேற்பட்ட சங்கம் செயல்படுகிறது. இந்நிலையில், சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து இரண்டு நாட்களாக, வெளி மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், அரசிடமிருந்து பெறப்பட்ட கைத்தறி தள்ளுபடி மானியத் தொகையில் ஏதேனும் முறைகேடு அல்லது தவறு நடந்துள்ளதா? என கணக்குகள் சரிபார்க்கப்படுகின்றன. சங்கங்கள் சார்பில் அரசுக்கு சமர்ப்பித்த தயாரிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் உண்மையா? என்பதை உறுதிப்படுத்தவே, இந்த ஆய்வு நடப்பதாக தெரிகிறது. ஈரோடு மாவட்டத்தைப்போலவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும், வேறு மாவட்ட அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருவது, நெசவாளர் கூட்டுறவு சங்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us