/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் பாதுகாப்பற்ற முறையில் ராட்டினமா; அதிகாரிகள் ஆய்வு
/
சாலையில் பாதுகாப்பற்ற முறையில் ராட்டினமா; அதிகாரிகள் ஆய்வு
சாலையில் பாதுகாப்பற்ற முறையில் ராட்டினமா; அதிகாரிகள் ஆய்வு
சாலையில் பாதுகாப்பற்ற முறையில் ராட்டினமா; அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 10, 2025 01:01 AM
அந்தியூர், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவுக்காக, பாதுகாப்பற்ற முறையில் சாலையில் ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார்படி, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பிரசித்தி பெற்ற அந்தியூர் புதுப்பாளையம் ஆடி தேர்த்திருவிழா வரும், 13லிருந்து நான்கு நாட்கள் நடக்கிறது. இங்கு நடக்கும் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து குதிரை, மாடுகள் கொண்டு வரப்படுகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்குப்பின், குதிரை சந்தைக்கு அடுத்தபடியாக, பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதற்காகவே, நடப்பாண்டு பல்வேறு ராட்டின துாரி வகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ராட்டினம், கப்பல் உள்ளிட்ட துாரி வகைகள், மரணக்கிணறு, சுனாமி உள்ளிட்டவைகளும் குழந்தை களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக, ராட்டின துாரி அமைக்கும் இடங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், தண்ணீர்பந்தல் பாளையத்திலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையின் வலது பக்க ரோட்டோரத்தில், ராட்டின துாரி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நேற்று அந்தியூர் தாசில்தார் கவியரசு, அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு சரவணன், கெட்டிசமுத்திரம் வி.ஏ.ஒ., அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
தாலுகா சர்வேயரை கொண்டு அளந்து, நெடுஞ்சாலைக்குள் துாரி இயங்குமாறு அமைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.