ADDED : மே 15, 2026 06:08 AM
ஈரோடு::ஈரோட்டில், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை, திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கோடை காலத்தில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் திட்டங்களின் கீழ் வினியோகம் செய்யப்படும் குடிநீர் அளவு, நிலுவையில் உள்ள குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, உறுதி செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை முழுமையாக செயல்படுத்துவது உள்பட பல்வேறு யோசனை தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் பங்கேற்றனர்.
யை சேர்ந்த குணசேகரன் மகன் பொன்கவின், 27; ஈரோட்டில் மூலப்பாளையம் கணபதி நகர் சாஸ்திரி நகரில், உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். அடிக்கடி மொபைல் போன் பார்த்ததை உறவினர் கண்டித்துள்ளார். இதனால் கடந்த, 9ம் தேதி மாலை ஊருக்கு செல்வதாக கூறி பொன்கவின் கிளம்பி சென்றார். ஆனால் ஊருக்கு செல்லவில்லை. உறவினர் செந்தில்குமார் புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
