ADDED : மார் 22, 2026 07:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சட்டசபை
தேர்தல் தொடர்பாக மாவட்ட நுண்ணறிவு குழு கூட்டம் கலெக்டர் கந்தசாமி
தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட பொது பார்வையாளர்கள், காவல்
பார்வையாளர், செலவின கண்காணிப்பு பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
கண்-காணிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினர்.
போலீஸ்,
வருமான வரித்துறை, வணிக வரி, வனத்துறை, கூட்டு-றவு துறை, மதுபான
கழகம், போக்குவரத்து துறை, வங்கிகள், வருவாய் துறை உட்பட பல்வேறு
துறையினர் பங்கேற்றனர். வங்கிகளிலும், பிற வாயில்களில் பண
பரிவர்த்தனை, மதுபான விற்பனை, இலவச பொருட்கள் வழங்கல், ஒரே
மாதிரியான பொருட்களை அதிகமாக கொள்முதல், தபால் மற்றும் கூரியர்
மூலம் அனுப்பப்படும் பொருட்கள், பிற முறைகேடு வழிகளை ஆய்வு செய்து
தடுக்கும் நடவடிக்கைக்கு யோசனை தெரிவிக்கப்-பட்டது.
