ADDED : மார் 27, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:தேர்தலில்,
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, அந்தியூர் பஸ் ஸ்டாண்டில்,
விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை
வகித்தார்.
இதில் கிராமிய கலைக்குழுவினர் ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை
ஆட்டம் ஆடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை
தொடர்ந்து நடந்த பேரணியில், கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்
சார்பில், பெட்டிக்கடை, வணிக நிறுவனங்கள், இரு சக்கர வாகன ஒட்டிகள்,
பஸ் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
