ADDED : ஆக 14, 2025 02:37 AM
ஈரோடு, பவானி குருப்பநாயக்கன் பாளையம் ரோட்டரி காலனியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 65. கடந்த 10ல் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, கண் பரிசோதனை முகாமிற்கு சென்றார். அங்கு சோதனை செய்த பின், கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை பொறுப்பாளருடன் ஈரோடு சென்றார். மறுநாள் தனியார் மருத்துவமனை சென்று பார்த்த போது அமிர்தலிங்கத்தை காணவில்லை. இதுகுறித்து அவரது மகள் சுகன்யா அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
* பீகார் மாநிலம், கயா மாவட்டத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி தன் தாயுடன் பி.பெ.அக்ரஹாரத்தில் உளள பிளீச்சிங் பட்டறை வளாகத்தில் தங்கியுள்ளார். தந்தை 10 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். கடந்த 11ம் தேதி மதியத்தில் இருந்து சிறுமியை காணவில்லை. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.