திறந்தவுடன் பணிமனைக்கு பூட்டு அப்புறம் எதுக்கப்பா திறந்தீங்க...!
திறந்தவுடன் பணிமனைக்கு பூட்டு அப்புறம் எதுக்கப்பா திறந்தீங்க...!
ADDED : ஏப் 06, 2026 05:40 AM

ஈரோடு:ஈரோடு
கிழக்கு தொகுதி யில் த.வெ.க., சார்பில் பாலாஜி போட்டியிடுகிறார்.
கடந்த, 4ம் தேதி காலை, ஜி.எச்., ரவுண்டானா அருகில், கிழக்கு தொகுதி
தேர்தல் பணிமனையை, அக்கட்சி நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்
செங்கோட்டையன் திறந்து வைத்தார். பணிமனையில் தேர்தல் பணி நடக்கும் என
கூறப்பட்டிருந்த நிலையில், சில மணி நேரத்தில் பணிமனை பூட்டப்பட்டது.
அதன் பிறகு பூட்டியே கிடக்கிறது.
இதுகுறித்து வாக்காளர்கள்
கூறியதாவது: கட்சி தேர்தல் பணிமனை என்றால், நாள் முழுவதும்
விறுவிறுப்பாக காட்சியளிக்கும். தேர்தல் குறித்து ஏதேனும் விபரம்
தேவைப்பட்டால் அங்கு சென்று விசாரித்து கொள்ளலாம். ஆனால் த.வெ.க.,
கட்சியினர் திறந்த கையோடு, பூட்டி வைத்து விட்டனர். அப்புறம் எதற்கு
பணிமனையை திறந்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.
