ADDED : மே 04, 2026 03:42 AM
பெருந்துறை:பெருந்துறை அருகே ஆட்டோ பக்கவாட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓட்டுனர் உயிரிழந்தார்.
சிவகங்கை
மாவட்டம் காரைக்குடி, உதயம் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன், 41;
திருப்பூர், காங்கயம் ரோடு, சுப்பையாபுரத்தில் தங்கி, சொந்த
ஆட்டோவில் வீடு வீடாக சென்று மிக்ஸி, கிரைண்டர் சர்வீஸ் செய்து வந்தார்.
இவர் மனைவி முபீனா, 45; தம்பதியின் மகன் அகமத், 8, அம்மா காளியம்மாள்,
60, மாமியார் மும்தாஜ், 70, ஆகியோர் ஒரே குடும்பமாக உள்ளனர்.
நேற்று
முன்தினம் ஞானசேகரன் ஆட்டோ ஓட்ட, முபீனா, அகமத், காளியம்மாள்,
மும்தாஜ் ஐந்து பேரும் ஆட்டோவில் சேலம் சென்று விட்டு திருப்பூருக்கு
திரும்பினர். பெருந்துறை-காஞ்சிக்கோவில் பிரிவு அருகே இரவு, 8.00
மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ வந்தது. அப்போது பின்னால் வந்த
அடையாளம் தெரியாத வாகனம் ஆட்டோவை பக்கவாட்டில் மோதி விட்டு
சென்றது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து.
இதில் அனைவரும் காயமடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில்
ஞானசேகரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பெருந்துறை
போலீசார் விசாரிக்கின்றனர்.
