ADDED : ஜன 09, 2025 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, வண்ணாங்காட்டு வலசு, கே.சி.பி., கார்டனை சேர்ந்த மனோகரன் மகன் ராகுல், 21. இவர் நண்பர் பெருந்-துறை, கூட்டுறவு நகரை சேர்ந்த ஜெயபால் மகன் அருள், 22. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நி-லையில் இருவரும், ராகுலுக்கு சொந்தமான பைக்கில், நேற்று மாலை, பெருந்துறை,- வாய்க்கால் மேடு சாலையில் சென்றனர். அப்போது சாலையில் உள்ள ஒரு வளைவில் திருப்பியதில், பைக் நிலை தடுமாறி எதிரே வந்த காரின் முன் பக்கத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே, பைக் ஓட்டி வந்த ராகுல் இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த அருள், பலத்த காயங்-களுடன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

