ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆனங்கூர்- - காவேரி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாள பகுதியில், ரயில் மோதி ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
இறந்த நபருக்கு 40 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.