ADDED : மார் 27, 2026 05:24 AM
கோபி:கோபி
அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 46; சமையல்
வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 2023ல் அக்.,16ல், கவுந்தப்பாடி அருகே
ஐய்யம்பாளையம் பகுதி தடப்பள்ளி கொப்பு வாய்க்கால் அருகே காயத்துடன்
இறந்து கிடந்தார். அவரின் தாய் அருக்காணி புகாரின்படி, கவுந்தப்பாடி
போலீசார் விசாரிக்கின்றனர்.
கோபி அருகே புதுக்கரைப்புதுாரை
சேர்ந்தவர் முருகன், 42; மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில்,
கிருஷ்ணமூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறி,
கோபியில் உள்ள வட்ட சட்ட பணிகள் அலுவலகம் மூலமாக, கோபி சார்பு
நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணன் முன் சரணடைய நேற்று மாலை
வந்தார்.
சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய அவர்
அறிவுறுத்தவே கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் கோபி மற்றும் கவுந்தப்பாடி போலீசார்
விசாரிக்கின்றனர்.
